Minimum Order Amount: ₹200

கரிசலாங்கண்ணி பொடி Karisalanganni(white)100gm Powder

₹140

₹180

கரிசலாங்கண்ணி  மண்ணீரல், கொழுப்பு கல்லீரல் மற்றும் ஹெபடைடிஸ் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.  பசியை அதிகரிக்கிறது, செரிமானத்தையும், பித்தச் சுரப்பை அதிகரிக்கிறது. இந்த மூலிகையின் அதிக கரோட்டின்  
 மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகளை வைத்தே அல்சரை எளிதில் குணப்படுத்தலாம். .கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தி பார்வையை தெளிவுபெற செய்யும் திறன் பெற்றது. கண் நரம்பு படலங்களில் உள்ள நீரை மாற்றி பார்வை நரம்புகளை பலப்படுத்தி கண் வறட்சியைப் போக்கும். கரிப்பான் இலை, மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து கொதிக்க வைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளித்து வந்தால் கண் நோய்கள் குறையும்.  கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்றவயும் குணமாக்கும்.  மூலநோய், குடல் புண் போன்ற நோய்களுக்கும் இந்தக் கீரை சிறந்த மருந்தாகத் திகழ்கிறது. மேலும் அஜீரணம், வயிறு சம்பந்தமான பிரச்சனை ஆகியவற்றையும் சரிசெய்கிறது.  
சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீர  உதவுகிறது. ஆஸ்துமா, இருமல் போன்ற பாதிப்பு கொண்டவர்கள் கரிசலாங்கண்ணி பொடியுடன், திப்பிலி சூரணம் சேர்த்து தினமும் ஒருவேளை என ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் சுவாச நோய்கள் தீருவதுடன்  இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தில் உள்ள நீர்த்தன்னையை சரி செய்கிறது. கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தாலும் சுவாச சிக்கல்கள் குணமாகும். இயற்கை முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க  உதவுகிறது.  தூளை ஒரு நாளைக்கு 5 கிராம் என்ற அளவில் தேனுடன் கலந்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இதன் மூலம் எளிதில் பரவக்கூடிய காய்ச்சல் போன்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். மஞ்சள் மற்றும் வெள்ளை கரிசலாங்கண்ணி என இரண்டிற்குமே நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் தன்மை உள்ளது.கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும். கூந்தலுக்கு பல்வேறு நன்மைகள் வழங்க வல்லது. இயற்கையாக கூந்தலின் அழகு மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்க கரிசலாங்கண்ணி முக்கிய பங்காற்றுகிறது. உங்கள் தலைமுடிக்கு இயற்கையான கண்டிஷனர் கரிசலாங்கண்ணி தான். முடியை இயற்கையாக வளர வைக்கும் தன்மை இதற்கு உண்டு. கரிசலாங்கண்ணி பொடி மற்றும் தேங்காய் எண்ணெய் இயற்க்கை பிரகாசத்தை கூந்தலுக்கு தருகிறது. முடி கருமையாக வளரும். பொடுகு நீங்கும்.இளநரை, தலைமுடி உதிர்தல் உள்ளிட்ட பல பிரச்சினைகளையும் தீர்த்து தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் முடியை கருகருவெனவும் வைத்திருக்க உதவி செய்யும் கல்லீரல் மற்றும் மண்ணீரல் சம்பந்தப்பட்ட நோய்களளுக்கு மிகச்சிறந்த தீர்வாக கரிசலாங்கண்ணி கீரை இருக்கிறது.மஞ்சள் காமாலை, கல்லீரல் வீக்கம், கொழுப்பு கல்லீரல், மண்ணீரல் வீக்கம் உள்ளிட்ட பல்வேறு கல்லீரல் மற்றும் மண்ணீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் தீர்க்க முடியும். பற்கள் உறுதியாகும். ஈறில் உள்ள நோய்க் கிருமிகள் அழிந்து ஈறுகள் பலப்படும். தொண்டைச் சளி வெளியேறி விடும்.நாள்பட்ட புண் ஆற கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும். கரிசலாங்கண்ணியை உணவாகவோ மருந்தாகவோ பயன்படுத்தினால், அறிவு விருத்தியாகும். பொன் போன்ற மேனி உண்டாகும்.

Karisalanganni is used to treat spleen, fatty liver and hepatitis.Increases appetite, digestion and bile secretion. High carotene in this herb
Ulcers can be easily cured with medicines made from herbs. .Has the ability to improve eye health and clear vision. It replaces the water in the optic nerve membranes and strengthens the optic nerves and relieves dry eyes. Grind and boil curry leaves and pepper and rub it on the head and after some time take a bath in hot water to reduce eye diseases.It also cures nearsightedness and farsightedness.This spinach is also an excellent medicine for diseases like hemorrhoids and intestinal ulcers. Also corrects indigestion and stomach related problems.
Helps to cure all diseases related to breathing. If people suffering from asthma and cough eat one mandal with Karisalanganni powder and Tippili Surana every day, respiratory diseases will be resolved and the blood will be cleansed and the water level in the blood will be corrected. A decoction of karisalanganni, thumbai leaves and keezhanelli is also taken to cure respiratory problems. Helps boost immunity naturally.If the powder is mixed with honey in the amount of 5 grams per day, immunity will increase. By this we can protect ourselves from diseases like flu which are easily spread. Both yellow and white karisalangkanni have immunity-boosting properties. Karisalangkanni is an excellent antiseptic. It is capable of providing various benefits to the hair. Karisalangkanni plays an important role in enhancing the beauty and health of hair naturally. Karisalanganni is a natural conditioner for your hair. It has the property of making hair grow naturally. Karisalangkanni powder and coconut oil give natural shine to the hair. Hair grows darker. Cures Dandruff. Karisalangani Kale is an excellent remedy for Liver and Spleen related problems which helps to increase hair growth and keep hair healthy, solves many problems like gray hair, hair loss etc. It can also solve various Liver and Spleen related problems like Jaundice, Liver inflammation, Fatty Liver, Spleen inflammation etc. . Teeth are strong. The germs in the gums will be destroyed and the gums will be strengthened. Throat mucus will come out. For chronic sores, Karisalangkanni is an excellent antiseptic, so sores that are rotting, the juice of the leaves are applied to the cuts, and the sores heal very quickly. If Karisalanganni is used as food or medicine, knowledge is enhanced. A mane like gold is produced.

  • Fast Delivery
  • Secure Payments
  • 17 customers viewed

Popular Products

Hot Deals அவுரி இலை பொடி indigo powder 100gm natural

Price

₹120 ₹140
100 gm
Hot Deals நீரிழிவு (டயாபெட்டீஸ்)சர்க்கரை நீர் நிவாரண மூலிகை ...

Price

₹500 ₹650
1 piece
Best Offer கருங்காலி மாலை 8mm karungali malai original

Price

₹800 ₹1,100
108 piece