Minimum Order Amount: ₹200

பூனைக்காலி பொடி Poonaikkali seed Powder 100gm

₹140

₹180

பூனைக்காலி விதை நரம்பு தளர்ச்சியை நீக்கி நரம்பு மண்டலதைபலமாக்குவதோடு பக்கவாத பிரச்சனையையும் குணப்படுத்த பயன்படும் ,பாலியல் ஆற்றலை ஆதரிக்கவும், இனப்பெருக்க உறுப்புகளை பலப்படுத்தும் , விதையில்  புரதம், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், ஸ்டார்ச் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் கனிசமான அளவு உள்ளன.விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் பூனைக்காலி மூலிகை சிறப்புமிக்கது.இலை, விதை, தண்டு என அனைத்து பகுதிகளிலும் மருத்துவ குணங்கள் உள்ளன. இவை வலி நிவாரணி, அழற்சி எதிர்ப்பு, வலிப்பு எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.ஜீரண உறுப்புகளின் மென்மையான தசை சுருக்கங்களை சீராக்கி, மலம் எளிதாக வெளியேறச் செய்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.எல் டோபா என்பது நரம்பியக்கடத்தி டோபமைனின் முன்னோடியாகும். இது மூளை மற்றும் நரம்பு மண்டல ஆரோக்கியத்தில் உதவுகிறது.  அறிவாற்றல், தூக்கம், மனநிலை,நினைவகம் மற்றும் கற்றல் ஆகிய செயல்பாடுகளில் டோபமைன் முக்கிய பங்கு வகிக்கிறது.பூனைக்காலி விதைகளில் இயற்கையாகவே லெவோடோபா எனப்படும் எல்-டோபா நான்கு முதல் ஏழு சதவிகிதம் என்ற விகிதத்தில் உள்ளது. 
பூனைக்காலி விதையில் உள்ள ஆல்கலாய்டுகள் டெஸ்டோஸ்டிரோன் சுரப்பை புத்துயிர் பெறச் செய்வதன் மூலம் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் உதவுகிறது.
டெஸ்டோஸ்டிரோன் அளவை மேம்படுத்துவதன் மூலம் விந்தணுக்கள் அதிக அளவில் உற்பத்தி செய்ய உதவுகிறது. விதை இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க உதவும் சிறந்த டானிக் ஆகும். இது ஆண் பெண் என இருவருக்கும் கருவுறுதல், ஆரோக்கியமான விந்து மற்றும் கருமுட்டை, இனப்பெருக்க உறுப்புகளின் சரியான செயல்பாடு போன்றவற்றை மேம்படுத்துவதில் உதவுகிறது.
பூனைக் காலி விதையில் உள்ள லெவோடோபா, நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் உதவுகிறது. மேலும் உடல் எடையை குறைக்கவும், நீரிழிவு சிகிச்சை அளிப்பதிலும் உதவுகிறது. விதையில் உள்ள ப்ரூரினினைன் போன்ற அல்கலாய்டுகள், இரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது. இதன் மூலம் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.விதை வளர்ச்சி ஹார்மோன்களை அதிகரிக்கிறது..பூனைக்காலி விதை மருத்துவ குணங்கள் காரணமாக ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டாலும் சில தீமைகளும் உள்ளன.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பூனைக்காலி விதை பாதுகாப்பானதா என்பது பற்றி போதுமான தகவல்கள் இல்லை.ஏதேனும் உடல் நலக் கோளாறு உடையவர்கள் பூனைக்காலி பயன்படுத்தும் முன் மருத்துவர் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.பொதுவாக இருதய நோய், நீரிழிவு நோய், இரத்தச் சர்க்கரைக் குறைவு, கல்லீரல் நோய், மனநோய், அல்சர் போன்ற உடல் நலக் கோளாறு உடையவர்களுக்கி பூனைக் காலி பரிந்துரைக்கப் படுவதில்லை.பூனைக்காலி விதை இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த அளவுகளில் மாறுதலை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளதால் எந்தவொரு அறுவை சிகிச்சைக்கும் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பு பூனைக்காலி உண்பதை நிறுத்த வேண்டும்.

mucuna pruriens seed is used to relieve neurasthenia, strengthen the nervous system and cure paralysis, support sexual energy, strengthen the reproductive organs, the seed contains protein, essential fatty acids, starch and essential amino acids. The parts also have medicinal properties. They have analgesic, anti-inflammatory, anti-convulsant and anti-microbial properties. They regulate the smooth muscle contractions of the digestive organs, facilitating easier passage of stool and improving digestive health. L-dopa is a precursor to the neurotransmitter dopamine. It helps in brain and nervous system health.Dopamine plays an important role in cognition, sleep, mood, memory and learning. mucuna pruriens seeds naturally contain four to seven percent of L-dopa, also known as levodopa.
The alkaloids in fenugreek seed help in increasing the sperm count by revitalizing testosterone secretion.
It helps to produce more sperms by improving testosterone levels. The seed is an excellent tonic to help increase reproductive power. It helps in improving fertility, healthy sperm and ovum, proper functioning of reproductive organs in both male and female.
Levodopa in fenugreek seeds helps diabetics maintain healthy blood sugar and cholesterol levels. It also helps in reducing body weight and treating diabetes. Alkaloids like prurinine in the seed dilate blood vessels. It reduces heart rate and blood pressure.Seed increases growth hormones..Caucasian seeds are used in Ayurveda and Siddha medicine due to their medicinal properties but also have some disadvantages.
There is not enough information about the safety of catnip seeds for pregnant women and nursing mothers. People with any medical conditions should consult a doctor before using catnip. Generally, people with heart disease, diabetes, hypoglycemia, liver disease, mental illness, ulcers, etc. Kale is not recommended. mucuna pruriens seeds are likely to cause changes in blood sugar and blood pressure levels so eating mucuna pruriens should be stopped at least two weeks before any surgery.

  • Fast Delivery
  • Secure Payments
  • 29 customers viewed

Popular Products

Hot Deals நீரிழிவுக்கு (Diabetic Controle) Diabetic Mend 200...

Price

₹500 ₹650
1 piece
Hot Deals வில்வ இலை பொடி Vilvam leaves powder 100gm

Price

₹140 ₹180
100 gm
Best Offer கருங்காலி மாலை 8mm karungali malai original

Price

₹800 ₹1,100
108 piece